உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கார் - லாரி மோதல் விபத்தில் தம்பதி பலி

கார் - லாரி மோதல் விபத்தில் தம்பதி பலி

செய்யாறு:காஞ்சிபுரம், வளத்தீஸ்வரன் தோட்ட தெருவை சேர்ந்தவர் தனியார் நிறுவன தொழிலாளி சீனிவாசன், 47. இவரது மனைவி மஞ்சுளா, 38. இருவரும் திருச்சி சென்று மீண்டும், மாருதி சுசூகி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் ஓட்டினார். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த துாசி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில், சீனிவாசன், மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பலியாகினர். துாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி