உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / உலக நன்மை வேண்டி தவழ்ந்த படி யாத்திரை

உலக நன்மை வேண்டி தவழ்ந்த படி யாத்திரை

திருவண்ணாமலை,:ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டம், கூடலாபாடியை சேர்ந்த ராஜகிரி மகராஜ் என்பவர், உத்தரகாண்ட் மாநிலம், கங்கோத்ரியில் இருந்து ராமேஸ்வரம் வரை, தெர்மாகோல் உதவியுடன் சாலையில் தவழ்ந்த படியே யாத்திரை செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்., 14ல் யாத்திரையை துவங்கிய இவர், திருவண்ணாமலை வந்தார். நகரின் முக்கிய பகுதியான தேரடி வீதி சாலையில் தெர்மாகோல் உதவியுடன் தவிழ்ந்தபடியே சென்றார். யாத்திரை குறித்து அவரிடம் கேட்டபோது, ''உலக நன்மைக்காகவும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வாறு செல்கிறேன்,'' என்றார்.இதே போல, கடந்த ஜூலை மாதம், மத்திய பிரதேச மாநிலம் கங்காப்பூரிலுள்ள, கோலோ கோதாம் ஆசிரமத்தை சேர்ந்த, 3 சாதுக்கள், உலக நன்மைக்காக திருவண்ணாமலை வழியாக, சாலையில் தெர்மாகோல் உதவியுடன் தவிழ்ந்த படி, யாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை