மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு அருகே, மாணவியை ஆட்டோவில் சென்னைக்கு கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த அப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விஜய், 30; இவரது ஆட்டோவில், சேத்துப்பட்டில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவி, தினமும் சென்று வருவது வழக்கம். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விஜய்க்கு வேறொரு பெண்ணுடன், கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணமானது. திருமணம் நடந்த ஓரிரு மாதங்களில் கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றார். இதனால் விஜய், மாணவியுடன் மீண்டும் பழக ஆரம்பித்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சென்னைக்கு ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.மாணவியின் பெற்றோர் புகார் படி, சேத்துப்பட்டு போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று, சேத்துப்பட்டு பஸ் ஸ்டாண்ட் அருகேயிருந்த ஆட்டோ டிரைவர் விஜய்யை கைது செய்து, மாணவியை மீட்டு விசாரிக்கின்றனர்.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1