உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ஜவ்வாதுமலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஜவ்வாதுமலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, ஜவ்வாது மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்ததில், காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நல்லாப்பட்டு, பலாமரத்துார், வாழைக்காடு, உள்ளிட்ட, 10 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி