மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
18 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
18 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை, தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்ததால், பேரூராட்சி அலுவலர் அதிர்ச்சியடைந்து, அதை ரத்து செய்யக்கோரி, தாசில்தாருக்கு மனு அளித்தார்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியிலுள்ள, 12 வார்டுகளில், 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், 12வது வார்டில், அண்ணா தெரு, ஜாகீர் உசேன் தெரு, வ.உ.சி., தெரு, பாத்திமா தெரு, ஆகியவற்றை இணைக்கும், 7 அடி அகல குறுக்கு தெரு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இதை ஒட்டியுள்ள கடை தெருவிலிருந்து, ஜாகீர் உசேன் தெருவை இணைக்கும், 7 அடி அகலம், 85 அடி நீளம் கொண்ட குறுக்கு தெரு, முட்புதருடன் காணப்படுகிறது. இத்தெருவில் சாலை வசதி, மின்வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான அதிகாரிகள் சில நாட்களுக்கு அளவீடு செய்ய சென்றனர். அப்போது அந்த இடம், 2018ல் தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து, 2023ல் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், பேரூராட்சி அலுவலர் சம்பத்குமார் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர், அந்த குறுக்கு தெரு, தனி நபர் பெயரில் பட்டா செய்துள்ளதாகவும், அதை ரத்து செய்து தருமாறும், சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலாவிற்கு மே, 15ல் கடிதம் அனுப்பினார். ஆனால், தாசில்தார் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். பேரூராட்சிக்கு சொந்தமான இடம், தனிநபருக்கு பட்டா போடப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025