உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்னல் தாக்கியதில் லாரி டிரைவர் பலி

மின்னல் தாக்கியதில் லாரி டிரைவர் பலி

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் ராமராஜன், 40. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு சுருட்டல் - ஆரப்பாக்கம் சாலையில், மொபைல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, துாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பாப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் மகள் மோனிஷா, 20, டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. வீட்டின் வெளியே உலர வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை எடுக்க மோனிஷா வெளியே சென்றார். அப்போது பலத்த மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பலியான மோனிஷாவிற்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.மோரணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை