மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
2 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
ஆரணி,:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேலானுார் பஞ்.,ல், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவியதாங்கல் கூட்ரோடு அருகிலிருந்து, கரிகாந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும், 2 கி.மீ., சாலை, 30 ஆண்டுக்கு மேலாக குண்டு குழியுமாக சேதமாகி உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், மோசமான சாலையால், அரசு மற்றும் தனியார் பஸ், கரிகாந்தாங்கல் கிராமத்திற்குள் செல்வதில்லை. இரவு நேரங்களில் முதியோர் மற்றும், கர்ப்பிணிகள் இச்சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலையை சீரமைத்துத் தர அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hour(s) ago
05-Oct-2025