உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு சீல்

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு சீல்

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட நெசவு கூடங்கள் உள்ளன. சில விசைத்தறி கூடங்களில், கைத்தறி ரகங்கள் நெசவு செய்வதாக, ஜவுளித்துறை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, சென்னை ஜவுளித்துறை மண்டல அமலாக்க பிரிவு அலுவலர் மனோகரன் தலைமையிலான குழுவினர் செய்யாறு கிழக்கு மாட வீதியில் விசைத்தறி கூடங்களில் ஆய்வு செய்தனர்.அப்போது பாண்டியன் என்பவரின் விசைத்தறி கூடத்தில், கைத்தறி நெசவு ரகங்கள் சட்ட விரோதமாக நெசவு செய்வதை கண்டறிந்து 'சீல்' வைத்தனர். புகாரின்படி, பாண்டியன் மீது செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை