உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியால் அதிர்ச்சி

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அய்யாவாடி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மகன், 22 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், மே, 31ல் காஞ்சிபுரத்திலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவியின் கழுத்தில் தாலி இருந்ததை கண்டு, சக தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்படி, அனக்காவூர் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் காவேரி, விசாரணை செய்தார். அதில், அந்த மாணவி திருமணம் செய்தது உண்மை என தெரிந்தது. இது குறித்து, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, மாணவியை மீட்டு, திருவண்ணாமலையிலுள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான அவரின் கணவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி