உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக பல்வீன் பணிபரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில், பத்திரபதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், முறைகேடாக பத்திரபதிவு நடைபெறுவதாகவும் வந்த புகாரின் படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தின் கதவை மூடி, அங்கிருந்த ஊழியர்கள், பத்திரபதிவு எழுத்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கணக்கில் வராத, 73,190 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய ஆணவங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்