| ADDED : ஆக 04, 2024 10:27 PM
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாந்தகுமார், 74, இவர் மனைவி சந்திரா, 69. இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது பின் கதவை திறந்து உள்ளே நுழைந்த இருவர், சந்திராவின் கழுத்திலிருந்த நகையை பறித்தனர்.இதனால் பயந்து அவர் கூச்சலிடவே, பக்கத்து அறையில் துாங்கி கொண்டிருந்த சாந்தகுமார் எழுந்து வந்தார். அவரை, உருட்டு கட்டையால் தாக்கி விட்டு, சந்திரா அணிந்திருந்த, 5 சவரன் நகையை பறித்து தப்பினர்.ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.