உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மூன்றரை அடி பெண்ணுக்கு பிரசவம்: டாக்டர்கள் சாதனை

மூன்றரை அடி பெண்ணுக்கு பிரசவம்: டாக்டர்கள் சாதனை

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலஸ்தம்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 30. இவரது மனைவி ராஜேஸ்வரி, 26. இவர், மூன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளவர். நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த, 19ல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். உயரம் குறைந்த இவருக்கு சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லாததால், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். நான்கே முக்கால் அடி உயரத்திற்கு குறைவாக உள்ள கர்ப்பிணிக்கு மயக்க மருந்து கொடுத்தால், அது மூளையை தாக்கி, கடும் விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால், டாக்டர்கள் அஞ்சினர். பின், மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவர்கள் நான்கு பேர் அடங்கிய குழுவினர், மயக்க மருந்து செலுத்தி, டாக்டர் ஜெயந்தி மற்றும் நர்ஸ் குரு குழுவினர் பிரசவம் பார்த்தனர். கடும் சவாலுக்கு இடையில், அறுவை சிகிச்சையில் அப்பெண்ணுக்கு, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதால் டாக்டர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை