மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், விவசாயியை கொலை முயன்ற, 10 பேருக்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த சதுப்பேரியை சேர்ந்த விவசாயி நீதிமான், 30; இவர், கடந்த, 2018 நவ., 4 ம் தேதி மனைவி நீலவேணியுடன் வீட்டில் இருந்தபோது, முன்விரோதத்தில், அதே பகுதியை சேர்ந்த ராஜா, திருஞானம், முருகன், ஜெயமுருகன், நவீன்குமார், ரமேஷ், சந்தோஷ், லட்சுமிகாந்தன், தரணி மற்றும் தமிழரசன், ஆகிய, 10 பேர் சேர்ந்து தாக்கினர். இதில், நீதிமான் படுகாயமடைந்தார். இது குறித்து, களம்பூர் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை, வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், கொலை முயற்சியில் ஈடுபட்ட, 10 பேருக்கும், தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 2,000ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025