உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்

உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. சில மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உணவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில், 10 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை