உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  யோகி ராம் சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா

 யோகி ராம் சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், யோகி ராம் சுரத்குமாரின், 107வது ஜெயந்தி விழாவான நேற்று, சிறப்பு ‍ஹோமம், நித்ய பூஜை நடத்தப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, கவிஞர் விசிறி சங்கர் நடுவராக பங்கேற்ற, 'பகவான் யோகி ராம் சுரத்குமாரை அடையாளம் கண்டு பெரிதும் போற்றியது, பாமரர்களே, படித்தவர்களே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஸ்ரீ சத்குருநாதன் ஓதுவார் குழுவினரின் தேவார பாடல், நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாதேவகி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ