உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / வியாபாரி வீட்டில் 20 பவுன் திருட்டு

வியாபாரி வீட்டில் 20 பவுன் திருட்டு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு பழங்காமூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 39. கோணிப்பை வியாபாரி. குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்னை சென்றவர், நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். கடைக்கு சென்று விட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த, 20 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. ஆரணி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ