உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது

சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது

திருவண்ணாமலை : காதலிப்பதாக சிறுமியை ஏமாற்றி, அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால், காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கல்லாய் சொரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ஹரிதாஸ், 22. இவர் பிளஸ் 2 படிக்கும் சிறுமியை கடந்த, இரு ஆண்டுகளாக காதலித்து வந்தார். மேலும் அவரை மிரட்டி, கடந்த ஆண்டு பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதில் மாணவி கர்ப்பமானார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கடும் வயிற்று வலியால் துடித்த சிறுமி, வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அழுகுரல் கேட்டு ஓடி சென்ற பெற்றோர் சிறுமி, குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதுகாப்பாக மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவண்ணாமலை மகளிர் போலீசார் விசாரித்து, ஹரிதாசை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை