உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, இளையாங்கன்னியில், அன்னை கார்மேல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர் விடுதி வார்டனாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த வட குளத்தை சேர்ந்த செபாஸ்டின், 56, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம், கடந்த சில நாட்களாக, இவர் சில்மிஷம் செய்து வருவதாக, தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் புகார் கூறினர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் நேற்று, போக்சோவில் வழக்குப்பதிந்து, விடுதி வார்டன் செபாஸ்டினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை