உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / உடல்நிலை பாதிப்பால் தம்பதி விபரீத முடிவு

உடல்நிலை பாதிப்பால் தம்பதி விபரீத முடிவு

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 65; இவரது மனைவி கோவிந்தம்மாள், 60; தம்பதிக்கு ஆறு மகள்கள் உள்ளனர். ஐந்து மகள்களுக்கு திருமணமான நிலையில், ஒரு மகளுக்கு திருமணமாகவில்லை. ஆறுமுகம் சிறுநீரக பிரச்னையாலும், கோவிந்தம்மாள் வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். குணமாகாததால் விரக்தியில் இருந்தனர்.திருமணமாகாத மகள் ஆராயி, உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆறுமுகம், கோவிந்தம்மாள் விஷம் குடித்தனர். ஆராயி வீடு திரும்பியபோது, ஆறுமுகம் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடியபடி கிடந்த கோவிந்தம்மாளை மீட்டு, போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவரும் இறந்தார். இதுகுறித்து போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை