உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

கீழ்பென்னாத்துார்:கீழ்பென்னாத்துார் அருகே, நிலத்தகராறில் விவசாயியான தம்பியை, கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற, அண்ணன் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கழிக்குளத்தை சேர்ந்த சகோதரர்கள் மூர்த்தி, 45, வேலு, 42. விவசாயிகளான இருவருக்கும், விவசாய நிலத்தில் பொதுப்பாதை தொடர்பாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மூர்த்தி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் கிரிக்கெட் மட்டையால் வேலுவை தாக்கினர்.மயக்கமடைந்த வேலுவை மீட்ட குடும்பத்தினர், வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். கீழ்பென்னாத்துார் போலீசார், மூர்த்தி மற்றும் மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி