வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Not NEET, but prohibition of liquor is required
செங்கம்: குடும்ப பிரச்னையில், இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடேசன், 36. இவரது மனைவி கவுரி, 31. இவர்களின் மகன்கள் கிஷோர், 5, தேவேஷ், 4. வெங்கடேசன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர், வேலைக்கு சரிவர செல்லாமல், தினமும் இரவில் மது போதையில் மனைவியிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதில், மனமுடைந்த கவுரி, நேற்று காலை, 11: 00 மணியளவில் அப்பகுதியிலுள்ள கிணற்றில் தன் மகன்கள் கிஷோர், தேவேஷ் ஆகியோரை வீசி கொலை செய்து, அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். செங்கம் தீயணைப்பு துறையினர் மூவரின் சடலத்தை மீட்டனர். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Not NEET, but prohibition of liquor is required