மேலும் செய்திகள்
வாய்க்கால் வழித்தடம் சீரமைக்க மக்கள் கெடு
21-Jun-2025
செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்நீர் குன்றம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் பிரச்னையை கடந்த ஓராண்டராக தீர்க்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், பெருநகர் - தேநீர்குன்றம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், '3 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் பிடித்து வருவதால், தினமும் சிரமமாக உள்ளது. சிப்காட் பணிக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கிராமத்தில் மின்விளக்குகள், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் சரிவர நடக்கவில்லை' என்றனர். செய்யாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட செய்தனர்.
21-Jun-2025