மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
பெரணமல்லுார்:திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அடுத்த கடுகனுார் பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் கடையில், 437 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடையின் விற்பனையாளராக சின்னதுரை, 45, என்பவர் உள்ளார். இந்த பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த சந்தோஷ், 50, உள்ளார். ரேஷன் கடை பணியாளர் சின்னதுரை, பொங்கல் பரிசு தொகுப்பு கூப்பன்களை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக நேற்று முன்தினம் வினியோகம் செய்தார். அப்போது, அங்கு வந்த பஞ்., தலைவர் சந்தோஷ் திடீரென விற்பனையாளர் சின்னதுரையிடமிருந்து, 10 பரிசு தொகை கூப்பன்களை பறித்து, தப்பி ஓடினார்.அதில், ஆறு கூப்பன்கள் இறந்தவர்கள் பெயரில் இருந்தன. இது குறித்து விற்பனையாளர் சின்னதுரை, செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா, கூட்டுறவு துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.இருவரும் விசாரணை நடத்தி, பஞ்., தலைவர் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரணமல்லுார் போலீசில் புகார் செய்தனர்.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1