மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
2 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
திருவண்ணாமலை : காதலிப்பதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன், 27; இவர், திருவண்ணாமலை அருகே கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது, பிளஸ் 2 படித்த, 17 வயது மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலிப்பதாக கூறி கடந்த, 2018 ஆக., 16 ல் மாணவியை மிரட்டி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருவண்ணாமலை தாலுகா போலீசார், மணிகண்டனை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, நேற்று முன்தினம் மாலை, மணிகண்டனுக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
2 hour(s) ago
05-Oct-2025