மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
16 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
செய்யாறு:சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயி மீதான குண்டர் சட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க பணிக்கு, 11 கிராமங்களில், 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, 126 நாட்களாக கடந்த ஆண்டு நவ.,4ம் தேதி வரை அப்பகுதி மக்கள், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமையில், எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து, 20 விவசாயிகளை கைது செய்தனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த அருள், 45, உள்பட ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தான நிலையில், அருள் மீது மட்டும் ரத்தாகவில்லை.இந்நிலையில் நீதிமன்ற ஜாமினால், 19 விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அருள் மீதான குண்டர் சட்டத்தை, தமிழக அரசு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம் அவர் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால், வேலுார் சிறையில் இருந்து அவர் விடுதலையாகவில்லை. ஆனாலும், அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை, செய்யாறு சிப்காட் மேல்மா கூட்ரோட்டில் விவசாயிகள், நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025