உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு

திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கொழப்பலுார் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகள் தேன்மொழி, 23; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன், 27, என்பவருக்கும், திருமணம் செய்ய முடிவாகி நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இருவரும் நேற்று முன்தினம் ஹோண்டா பைக்கில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற பைக்கிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்த தேன்மொழி தலையில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்றிரவே இறந்தார். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை