டாக்டருக்கு பளார் விட்ட வாலிபர் கைது
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பழனி, 32, செந்தமிழ்ச்செல்வன், 30. இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், விக்னேஷ், பழனியை தாக்கினார். இதில், படுகாயமடைந்த பழனி, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு மது போதையில் சென்ற செந்தமிழ்ச்செல்வன், 'அண்ணனுக்கு அளித்த சிகிச்சை சரியில்லை' எனக்கூறி செவிலியரிடம் தகராறு செய்ததோடு, அங்கிருந்த டாக்டரை தகாத வார்த்தையால் பேசி, கன்னத்தில், 'பளார்' என அறைந்தார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி அளித்த புகாரின்படி, ஆரணி டவுன் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.