உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி:ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நேற்று அதிகாலை சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த, 46 வயது ஆண் பயணியை சோதனையிட்டனர். அப்போது அவர் தன் உடலில், 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 74.91 லட்சம் ரூபாய். அந்த நபரை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ