| ADDED : மே 30, 2024 09:32 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, மேய்க்கல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவரின் பாட்டி இறந்ததால், மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர் ராமச்சந்திரனை அணுகி, இறந்தவர் விபரங்களை தெரிவித்து, இறப்பை உறுதி செய்து, மருத்துவ சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளனர்.விசாரித்த டாக்டர், 'இறந்தவர் உடலை இந்த மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்திருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும். இறந்தவர்களுக்கு சான்று வழங்குவதற்காக நான் இங்கு இருக்கவில்லை' என்று கூறியுள்ளார்.மேலும், 'இறந்தவரை நேரடியாக பரிசோதித்து விட்டு தான் சான்று வழங்க முடியும். இல்லாவிட்டால், இயற்கை மரணம் என்று பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுதி வாங்கி வந்து கொடுத்து விட்டு, 1,000 ரூபாய் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்க முடியும்' என்றும் கூறியுள்ளார்.அரசு டாக்டர் ஒருவர், சான்று வழங்க பணம் கேட்டு அடாவடியாக பேசிய வீடியோ, பொதுமக்கள் மத்தியில் பரவி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.