உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,

மணல் கடத்தல் சிக்கிய 3 டாரஸ் லாரிகள், ஜே.சி.பி.,

திருச்சி:திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்துள்ள கொளுக்கட்டைப்பட்டி கோரையாற்றில், நேற்று அதிகாலை, அரசின் அனுமதியின்றி, ஒரு ஜே.சி.பி., வாயிலாக மூன்று டாரஸ் லாரிகளில் மணல் கடத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், லாரிகளை மணலோடு விட்டுவிட்டு, டிரைவர்கள் தப்பியோடி விட்டனர். ஜே.சி.பி., டிரைவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார், 34, என்பவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். 8 யூனிட் மணலுடன், 3 டாரஸ் லாரிகள், ஒரு ஜே.சி.பி., ஒரு பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த மணிகண்டம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை