மேலும் செய்திகள்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: 4 பேர் கைது
15-Feb-2025
திருச்சி: கோவில் நிலத்தில் இருந்த 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி அருகே, உன்னியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், பெரியபள்ளிபாளையத்தில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில், வேம்பு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. மர்ம நபர்கள், அந்த மரங்களை வெட்டிக் கடத்துவதாக, அறநிலையத்துறை ஆய்வாளர் மலர்விழிக்கு தகவல் கிடைத்தது.தொட்டியம் போலீசார் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவாசகம், ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் சென்று பார்த்தபோது, அங்கு மரங்களை வெட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.கரூர் மாவட்டம், கழுவூரைச் சேர்ந்த சுப்ரமணி, 34, சின்ன கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சிவசாமி, 39, நாமக்கல் மாவட்டம், குமரிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி, 38, மூங்கில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி, 40, ஆகியோர் 12 டன் மரங்களை வெட்டி, லாரியில் கடத்த முயன்றது தெரிய வந்தது. காட்டுப்புத்துார் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, வெட்டப்பட்ட மரங்கள், பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
15-Feb-2025