உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காற்றில் பறந்த அரசு டவுன் பஸ் கூரை

காற்றில் பறந்த அரசு டவுன் பஸ் கூரை

லால்குடி:திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்திற்கு, நேற்று காலை 30க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. லால்குடி அருகே அந்த டவுன் பஸ் சென்றபோது, காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், பஸ்சின் கூரை காற்றில் பறந்தது. இதைப் பார்த்து, பஸ்சில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர், பயணியரை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு, அங்கிருந்தவர்கள் உதவியுடன் தற்காலிகமாக கூரையை சரி செய்து, பஸ்சை பணிமனைக்கு எடுத்துச் சென்றார். சில மாதங்களுக்கு முன், அரசு டவுன் பஸ் ஒன்றில் இருக்கை கழன்று விழுந்ததில், அந்த பஸ் கண்டக்டர் காயம் அடைந்தார்.காலாவதியான பஸ்களையும், பராமரிப்பு இல்லாத பஸ்களையும் இயக்குவதால், இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை முறையாக பராமரிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ