உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மகளுக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 42. அதே பகுதியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளின் தாயை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரின், 16 மற்றும் 13 வயது சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதில், ஒரு சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது தெரிந்தது.இதையடுத்து, பெருமாள் மீது, அந்த சிறுமியின் தாய், மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பெருமாளை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ