உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டத்தால் பீதி

திருச்சி காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டத்தால் பீதி

திருச்சி:திருச்சி காவிரியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்ததால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.திருச்சி மேலசிந்தாமணி காவிரி பாலம் அருகே உள்ள மணல் திட்டுகளில், நேற்று முன்தினம் மாலை, இரு முதலைகள் இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை, ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் காவிரி ஆற்றுப்பகுதியில் தேடினர். முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை முதலே, வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீண்டும் முதலை நடமாட்டத்தை கண்காணித்தனர். நேற்று மாலை வரை முதலைகள் தென்படவில்லை. முதலைகள் தென்பட்ட பகுதி மேலசிந்தாமணி, அண்ணாசிலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் ஆற்றுக்கு செல்லும் பகுதி என்பதால், பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்றும், இறைச்சி கழிவுகளை ஆற்றில் கொட்ட வேண்டாம் என்றும், அப்பகுதி மக்களுக்கு, வனத்துறையினர் மைக்கில் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''தொடர்ந்து முதலைகள் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்து வருகிறோம். முதலைகள் தென்பட்டால், அவற்றை பிடித்து வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கண்ணில் தென்படவில்லை என்பதால், அவை வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து இருக்க வாய்ப்புள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை