உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாலத்தில் கார் மோதி பெண் பலி கணவர் உட்பட 3 பேர் காயம்

பாலத்தில் கார் மோதி பெண் பலி கணவர் உட்பட 3 பேர் காயம்

எட்டயபுரம்,:துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பாலத்தில் கார் மோதி பெண் உயிரிழந்தார். அவரது கணவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.திருச்சி அருகே உள்ள முசிறி தாலுகா மாங்கரை கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா(43) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது மனைவி உஷா(39) மகன் செந்துார் நாதன்(6) ஆகியோருடன் திருச்சியிலிருந்து திருச்செந்துார் கோயிலுக்கு செல்ல மதுரை துாத்துக்குடி ரோட்டில் வந்து கொண்டிருக்கிருந்தார். காரை ராஜாவின் நண்பர் கார்த்திக் ஒட்டி சென்றார்.எட்டயபுரம் அடுத்துள்ள சிந்தலக்கரை அருகில் உள்ள பாலத்தில் திடீரென கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் இருந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார் மற்ற மூவருக்கும் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் பலியான உஷாவின் உடல் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒபடைக்கப்பட்டது எட்டயபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ