உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு

அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு

திருச்சி,:திருச்சியில் இருந்து நேற்று மாலை 4.20 மணிக்கு, சிங்கப்பூர் செல்ல வேண்டிய 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானத்தில் பயணிக்க, 180 பயணியர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், நேற்று அந்த விமானம் 3:00 மணிக்கே புறப்பட்டு சென்று விட்டது. முன்னதாக கிளம்புவது குறித்து பயணியருக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அதன்படி, 160 பயணியர் உரிய நேரத்துக்கு வந்து விட்டனர்.ஆனால், 20 பயணியர் தாமதமாக வந்து, விமானத்தை தவற விட்டனர். விமானம் சென்று விட்டதை அறிந்த அவர்கள், விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, இன்று மதியம் செல்லும் விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பயணியர் அமைதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை