உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி, டிச. 26-திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின், 100க்கு நேற்று முன்தினம் மாலை அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இரவு, 9:00 மணிக்கு வெடிக்கும் என்று கூறிவிட்டு, போனை கட் செய்து விட்டார்.இதையடுத்து திருச்சி மாநகர போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விமான நிலையம் முழுவதும் தேடியதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.விமான நிலைய போலீசார் விசாரணையில் மிரட்டல் விடுத்தது, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை அவனியாபுரத்தைச் சேர்ந்த நிஜார் அகமது, 30, என்பது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என தெரிந்தது. நிஜார் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை