| ADDED : செப் 27, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு
பதவிகளுக்கு 8, 681 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருச்சி
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு
தாக்கல் செய்தவர்கள் விபரம்: பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 3,126பேரும்,
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 632 பேரும், யூனியன் கவுன்சிலருக்கு 249,
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 17, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு
238, டவுன் பஞ்சாயத்து தலைவர் 17 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு
114, நகராட்சி தலைவர் 4 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 4,397 பேர் ஒரே நாளில்
வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,661 பேர் வேட்புமனு
தாக்கல் செய்துள்ளனர்.