உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி அ.தி.மு.க., மா.செயலாளர் வீடு முற்றுகை

வேட்பாளர்கள் பட்டியலில் குளறுபடி அ.தி.மு.க., மா.செயலாளர் வீடு முற்றுகை

திருச்சி: திருச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநகராட்சி தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது அதிருப்தி காரணமாக, இரு மாவட்ட செயலாளர்களின் அலுவலகங்களையும், வீடுகளையும் அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர். திருச்சி மாநகராட்சிக்கும் வரும் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடக்கும், என நேற்று முன்தினம் இரவு தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவே, திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் வெளியிட்டார். கவுன்சிலர் பதவிக்கு அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் மீதான அதிருப்தி மற்றும் சீட் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் என பலரும், நேற்று காலை தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவே, வேட்பாளர் பட்டியல் அதிருப்தி காரணமாக, மாநகர் மாவட்ட அ.தி.மு.க, செயலாளரும், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மனோகர் வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மனோகரனின் கார் கண்ணாடி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அவர், போலீஸில் புகார் செய்யவில்லை. அதேபோல், திருச்சி புறநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது கொண்ட அதிருப்தி காரணமாக, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக அமைச்சருமான சிவபதியின், திருச்சி வீட்டை, 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று காலை முற்றுகையிட்டனர். முற்றுகையின் போது, இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், முனுசாமி, செங்கோட்டையன் உள்பட 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். ஆலோசனை முடிந்த பின், அமைச்சர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Manaimaran
அக் 05, 2025 10:21

அ.தி.முக. பா.சா. கூட்டனியில் இணைந்தால் தப்பலாம் இல்லாவிடில் .தி.மு.க. விழுங்கிவிடும்


raja
அக் 05, 2025 12:01

திமுக வின் பி டீம் தான் த வே க....


சமீபத்திய செய்தி