மேலும் செய்திகள்
இன்டாங்குளத்தில் சேதமான ரோடு
21-Oct-2024
திருத்தணி, ஊத்துக்கோட்டையில் மழை
06-Oct-2024
திருச்சி : திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் சிவன் கோவில் எதிரே காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் மாலை, ஒன்றரை அடி நீளம், ஒன்றரை கிலோ எடை கொண்ட மினி ராக்கெட் லாஞ்சர் மிதந்து வரும் போது கண்டெடுக்கப்பட்டது. இதை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார், அதை அப்படியே தங்களின் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்று காலை, திருச்சி மாவட்ட வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார், உரிய பாதுகாப்புடன், அந்த ராக்கெட் லாஞ்சரை ஆய்வு செய்தனர்.அப்போது அது டம்மி என்று தெரிய வந்தது. இதையடுத்து ராக்கெட் லாஞ்சரை இன்று, திருச்சியில் உள்ள, 117 பட்டாலியன் ராணுவப்பிரிவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். காவிரி ஆற்றில் மிதந்து வந்த ராக்கெட் லாஞ்சர் டம்மி என்று தெரிந்ததும் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
21-Oct-2024
06-Oct-2024