மேலும் செய்திகள்
நசியனுார் வாய்க்காலில் இறந்து கிடந்த முதியவர்
04-Sep-2025
சொத்துக்காக தந்தை கொலை நாடகமாடிய மகன் கைது
22-Sep-2025
திருச்சி; திருச்சி, உய்யக்கொண்டான் வாயக்காலில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் மிதந்து வந்த மூதாட்டியை, போலீசார் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருச்சி மாவட்டம், அதவத்துாரை சேர்ந்த ரத்தினம் மனைவி இளஞ்சியம், 65. இவர், நேற்று முன்தினம் மதியம், உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்தார். மயங்கிய நிலையில், அவர், 2 கி.மீ., துாரத்துக்கு வாய்க்காலில் மிதந்து வந்தார். வயலுார் பகுதியில் இருந்தவர்கள், இறந்த நிலையில் யாரோ மிதந்து வருவதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு கார்த்திகேயன் மற்றும் போலீஸ்காரர் கணேஷ்மோகன் ஆகியோர் வாய்க்கால் நீரில் நீந்தி சென்று, மிதந்து வந்த இளஞ்சியத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவர் மயக்க நிலையில் இருப்பதை அறிந்து, உடனே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மிதந்து வந்த மூதாட்டியை காப்பாற்றிய போலீசாரை, மூதாட்டியின் உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.
04-Sep-2025
22-Sep-2025