உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆசிரியையுடன் தகாத உறவு தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

ஆசிரியையுடன் தகாத உறவு தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

திருச்சி: 'பெல்' எனும் மத்திய அரசு நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில், கம்ப்யூட்டர் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், பெல் நிறுவன வளாகத்தில், பாய்லர் பிளான்ட் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, தலைமை ஆசிரியராக இருந்தவர் மணியரசன், 55. இவருக்கும், அதே பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வரும், 35 வயது பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவருக்கும், திருமணமாகி விட்டது. அந்த ஆசிரியையின் கணவர், பெல் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். சி ல நாட்களுக்கு முன், தன் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில், மணியரசனை வீட்டுக்கு வரவழைத்து, அவருடன் உல்லாசமாக இருந்தார் கம்ப்யூட்டர் ஆசிரியை . எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்த கணவர், வீட்டுக்குள் தன் மனைவி, தலைமை ஆசிரியருடன் இருப்பதை பார்த்து, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்த பின், கதவை திறந்து, தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பினர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மணியரசனிடம் விருப்ப ஓய்வு கடிதம் வாங்கி, அவர் பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பெல் குடியிருப்பில் இருந்தும் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர், ஏற்கனவே, பள்ளியில் பணியாற்றும் இன்னொரு பெண், பெல் வளாகத்தில் சில பெண்களிடம் தகாத உறவு வைத்திருந்த புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி