ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம், நாட்டார்பட்டியைச் சேர்ந்த விவசாயி கண்ணன், 50. இவரது மகள் தவமணி, 16. துவரங்குறிச்சி அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று காலை மகளை பள்ளியில் விடுவதற்காக, தன் டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்றார். நத்தம் - துவரங்குறிச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் சென்று கொண்டிருந்த அம்மாநில ஆம்புலன்ஸ், மொபட்டின் பின் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டு கண்ணன் இறந்தார். மகள் தவமணி படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர், தெலுங்கானாவைச் சேர்ந்த கிரண் குமார், 25, என்பவரை கைது செய்தனர்.