மேலும் செய்திகள்
4,000 போதை மாத்திரை பதுக்கிய 5 பேர் கைது
27-Nov-2025
ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்
24-Nov-2025
அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்
24-Nov-2025
பிரசவத்தில் பெண் மரணம் டி.ஆர்.ஓ., குழு விசாரணை
24-Nov-2025
திருச்சி: திருச்சி அருகே, நிலத்தை அபகரித்து, வழக்கு போட்டவர்கள் மீதான வன்கொடுமை புகாரில், வழக்கு பதிவு செய்யாத பெண் டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., மீது, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள காவல்காாரன்பட்டியை சேர்ந்தவர் காந்தி. பட்டியலினத்தை சேர்ந்த இவரது முன்னோருக்கு அரசு கொடுத்த நிலத்தை, அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை என்ற மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து, நிலம் தனக்கு சொந்தமானது என, வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக, வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, 'அண்ணாதுரை மீது வழக்கு பதிய வேண்டும்' என, 2021ல் புத்தாநத்தம் போலீசில், காந்தி புகார் அளித்தார். அப்போது, புத்தாநத்தம் பெண் எஸ்.ஐ., சூர்யா, மணப்பாறை டி.எஸ்.பி., ஜனனிப்பிரியா ஆகியோர், வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல், சிவில் வழக்கு என்று கூறி, புகார்தாரரை அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து, காந்தி, வக்கீல் அலெக்ஸ் மூலம், திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, மணப்பாறை டி.எஸ்.பி., ஜனனிப்பிரியா, எஸ்.ஐ., சூர்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து, இருவரும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா, ஜனனிப்பிரியா, சூர்யா மீது, வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு, நான்கின் கீழ் புத்தாநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிந்து, எட்டு வாரத்தில் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி., ஜனனிப் பிரியா தற்போது கோவை மாவட்டத்திலும், எஸ்.ஐ., சூர்யா தஞ்சை மாவட்டத்திலும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
27-Nov-2025
24-Nov-2025
24-Nov-2025
24-Nov-2025