மேலும் செய்திகள்
ரூ.68 லட்சம் நகை பறிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
காரில் பதுக்கி சரக்கு விற்ற திருச்சி போலீஸ்காரர் கைது
07-Dec-2025 | 1
திருச்சி:திருச்சிக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை, வரவேற்க பல்வேறு அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வந்த போதிலும், அவர், தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பலர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர். அவரை வரவேற்கவும், வழியனுப்பவும் விமான நிலையம் உள்ளே செல்ல 40க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி - முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. அதேநேரம் வரவேற்பு நிகழ்வின் போது, பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை பிரதமர் மோடியிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட மோடி, பின்னர் படிக்கிறேன் என கூறி விட்டார். 'தங்களை சந்திக்க நேரம் வேண்டும்' என்று பிரதமரிடம், பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். அதற்கு, 'கடிதம் அனுப்புங்கள் சந்திக்க நேரம் ஒதுக்கப்படும்' என கூறினார்.
7 hour(s) ago
12-Dec-2025
07-Dec-2025 | 1