உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ

மகளுக்கு தொல்லை தந்தைக்கு போக்சோ

திருச்சி: திருச்சி அருகே, 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திரு ச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த, 12 வயது மாணவி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார். அந்த மாணவியின் தாய், கணவருடன் ஏற்பட்ட தகராறில், தன் இளைய மகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மேற்கண்ட மாணவி தன் தந்தையுடன் வசித்து வந்தார். வீட்டில் தனியே மாணவி இருந்ததால், மகள் என்றும் பாராமல், அவரது தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த, 27ம் தேதி சேலத்துக்கு மாணவியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, பஸ்சிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்த சக பயணியர், தந்தையை அடித்து கீழே இறக்கி விட்டுள்ளனர். பின், மாணவி அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஒப்படைக்கப்பட்டார். மாணவியை அவர்கள் திருவெறும்பூர் அழைத்து வந்து, வீட்டை அடையாளம் கண்டு, அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப் போது மாணவிக்கு, தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. புகாரில் திருவெறும்பூர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, தந்தையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ