உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தபால் ஊழியருக்கு தொல்லை போலீஸ்காரருக்கு காப்பு

தபால் ஊழியருக்கு தொல்லை போலீஸ்காரருக்கு காப்பு

திருச்சி:தபால் துறை ஊழியரான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, பொன்மலையில், 25 வயது இளம்பெண் அஞ்சல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த, 8ம் தேதி பணி நிமித்தமாக பொன்மலை பகுதியில் டூ - வீலரில் சென்றபோது, பைக்கில் வந்த நபர், இளம்பெண்ணை வழிமறித்து, பாலியல் தொல்லை கொடுத்து தப்பினார். இளம்பெண் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் மர்ம நபரை தேடினர். அப்பகுதி, 'சிசிடிவி'க்களை ஆய்வு செய்ததில், அவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன், 32, என, தெரிந்தது. நேற்று காலை கோபாலகிருஷ்ணனை, பொன்மலை போலீசார் கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி