மேலும் செய்திகள்
தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
21-Nov-2025
திருச்சி: திருச்சியில், அடிக்கல் நட்டு இரண்டு ஆண்டுகளாகியும், பூங்கா அமைக்கும் பணிகளை துவங்காததால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியில், 48.85 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2023ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அடிக்கல் நட்டு, இரண்டு ஆண்டுகளாகியும் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பூங்கா அமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூங்கா அமைக்க அடிக்கல் நட்ட இடத்தை,25 வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் அபகரிக்க முயற்சிப்பதால், மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்காமல் இருப்பதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால், பூங்கா அமைப்பதற்கான பணிகளை, உடனடியாக துவங்க வலியுறுத்தி, சண்முகா நகர் பகுதி மக்கள், நேற்று, புத்துார் பகுதியில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21-Nov-2025