உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சமயபுரம் கோவில் குளத்தில் மிதந்த 2 உடல்கள் மீட்பு

சமயபுரம் கோவில் குளத்தில் மிதந்த 2 உடல்கள் மீட்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் தெப்பக்குளம், சமயபுரம் பைபாஸ் ரோட்டின் அருகே உள்ளது. தினமும் இங்கு பக்தர்கள் பலரும் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வர். இந்நிலையில், நேற்று காலை தெப்பக்குளத்தில் இரு ஆண் சடலங்கள் மிதந்ததை பார்த்து, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சமயபுரம் போலீசாருக்கு தகவல் கூறினர். அதன்படி, போலீசார், தீயணைப்பு படையினரின் உதவியோடு சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் ஒருவருக்கு, 50, மற்றொருவருக்கு 40 வயது இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஒருவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இருவரையும் வேறு எங்காவது கொலை செய்து, குளத்தில் வீசியுள்ளனரா அல்லது குளத்தில் குளிக்கும் போது இறந்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை