உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் அறிவியல் தொழில்நுட்ப விழா நிறைவு

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் அறிவியல் தொழில்நுட்ப விழா நிறைவு

திருச்சி: திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில் நுட்ப நிறைவு விழா நடந்தது. பல்கலைக்கழக இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் தலைமை தாங்கி, அறிவியல் திட்ட மாதிரிகளை பார்வையிட்டார். பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி புலமுதல்வர் சேகர் வரவேற்றார். இதில், 500க்கும் மேற்பட்ட அறிவியல் திட்ட மாதிரிகள், சமூகம் சார்ந்த அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சன் சிறந்த அறிவியல் திட்ட மாதிரிகளுக்கு பரிசு வழங்கினார். கல்வி புலமுதல்வர் மதனா தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சிராஜ்னிஷா நன்றி கூறினார். இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு புதிய அறிவியல் திட்ட மாதிரிகளை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் ரீதியாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை